தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி அனல் பறக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
பாலூர், ஆத்தூர், திம்மாவரம் மற்றும் பழவேலி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் திறந்தவெளி வேனில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தங்கள் வேட்பாளருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்
வேட்பாளரை வரவேற்கும் விதமாக தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான தாரை தப்பட்டை முழங்க, புலியாட்டம் பொய்க்கால் குதிரை மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆடல் பாடலுடன் தேர்தல் களத்தை விழாக்கோலமாக மாற்றினர்
பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தாமாக முன்வந்து வேட்பாளர் கார்த்திக் தண்டபாணிக்கு மாலை அணிவித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்தப் நெகிழ்ச்சியான சம்பவம் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
பிரசாரத்தின் போது வேட்பாளர் பேசியதாவது
கடந்த ஐந்து கால திமுக அரசின் சாதனைகளை மக்கள் நன்கு அறிவார்கள் எஞ்சியுள்ள திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புதிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்
திமுக அரசின் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடி வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்…!